Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரண்டு குப்பங்களுக்கிடையே மோதல் - மூவர் பலி

இரண்டு மீனவக் குப்பங்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து பாண்டிச்சேரியில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

fishermen clash

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடப்பாக்கம் மற்றும் ஆலம்பரை ஆகிய இரண்டு குப்பங்களுக்கு இடையே நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மீனவர்கள் தங்கள் படகுகளை டிராக்டர் மூலமாக கடலுக்குள் செலுத்துவார்கள். அதற்காக இந்த இரண்டு குப்பங்களுக்கும் தனித்தனியாக டிராக்டர்கள் இருக்கின்றன.

இந்நிலையில், ஆலம்பரை குப்பத்துக்குண்டான டிராக்டர் பழுதடைந்தது. அதனால் கடப்பாக்கம் குப்பத்தில் உள்ள டிராக்டரை ஆலம்பரை குப்பத்தில் உள்ளவர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு நாங்கள் எங்கள் படகுகளை கடலுக்கு அனுப்பிவிட்டு, டிராக்டரை கொடுக்கிறோம் என்று கடப்பாக்கம் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதில் கடுப்பான ஆலம்பரை குப்பத்தைச் சேர்ந்த ஒருவர் கடப்பாக்கம் பகுதியில் உள்ள டிராக்டரின் சாவியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். இதில் கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்படவே கடப்பாக்கம் பகுதியினர் சூணாம்பேடு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

நேற்று இரவு இரண்டு காவலர்கள் மட்டும் வந்து சுற்றிப் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். காலையில் கடப்பாக்கம் குப்பத்தினர் சுமார் 10 பேர் கடல் பகுதிக்குச் சென்றனர். அந்த நேரத்தில் அங்கு பதுங்கி இருந்த அலம்பரை குப்பத்தைச் சேர்ந்த சுமார் 50 பேர் கடப்பாக்கம் குப்பத்தினரை சரமாரியாக வெட்டினார்கள். 

இதில் சுமார் 15 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திலேயே இருவர் இருந்தனர். மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பத்துக்கும் மேற்பட்டவர்கள் பாண்டிச்சேரியில் உள்ள பாண்டிச்சேரி இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் எஸ்பி சந்தோஷ் ஹதிமானி, ஐஜி ஸ்ரீதர், டிஐஜி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்பகுதியில் காவல்துறையினர் குவிந்ததால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement