Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லைசென்ஸ் எடுப்பதற்காக ஆர்.டி.ஓ அலுவலகத்தில் அலைமோதும் கூட்டம்!

ஆர்.டி.ஓ அலுவலகம்

வாகன ஓட்டிகள் அசல் சான்று வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டதால், லைசென்ஸ் எடுக்கவும், தொலைந்துபோன சான்றுகளை வாங்கவும் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

வாகன ஓட்டிகள் அசல் சான்றுகளை வைத்திருக்க வேண்டும். அப்படிச் சான்றுகள் இல்லாவிட்டால் 500 ரூபாய் அபராதம் அல்லது 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிரடியாக அறிவித்தது. இந்த உத்தரவுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. இருப்பினும், இன்று காலை முதலாகவே போக்குவரத்து காவல்துறையினர் சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து சோதனையிடத் தொடங்கினர்.

ஏற்கெனவே, அரசின் இந்த அறிவிப்புக்கு டிரைவர்கள், வாகன உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் சாலைகளில் காவல்துறையினர் இன்று அதிரடிச் சோதனை நடத்தி வந்தனர். ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்து விட்ட நிலையில் ஜெராக்ஸ் காப்பியை வைத்து சமாளித்து வந்தவர்கள் இந்த உத்தரவால் திண்டாடினர். அத்துடன், லைசென்ஸ் கால அவகாசம் முடிந்த நிலையில் புதுப்பிக்கத் தவறியவர்களும் குழப்பம் அடைந்தனர். 

லைசென்ஸ் எடுக்க வந்த கூட்டம்

இதனால் புதிதாக லைசென்ஸ் எடுப்பதற்காகவும், புதுப்பித்தல், டூப்ளிகேட் லைசென்ஸ் எடுப்பது என பல்வேறு பணிகளுக்காக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது. நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அலுவலகத்தில் காலை முதலாகவே கூட்டம் அதிகமாக இருந்தது. போக்குவரத்து அதிகாரிகள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி அவர்களின் தேவைகளை நிறைவேற்றினார்கள். 

ஆனாலும், கூட்டம் அதிகம் இருந்த நிலையில் திடீரென நெல்லை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள கணினிகள் செயல் இழந்தன. இதனால் லைசென்ஸ் எடுக்க வந்தவர்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை உருவானது. சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறிது நேரத்துக்குப் பின்னர் அந்த கோளாறு சரியானதால் மீண்டும் பணிகள் நடைபெற்றன. தற்போது இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு காரணமாக வாகன ஓட்டிகள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement