Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆணவக் கொலை சாட்சி மர்மசாவு! - அதிர்ச்சியில் சி.பி.ஐ போலீஸார்

ஆணவக் கொலை ஒன்றின் முக்கிய சாட்சி ஒருவர் மர்மமாக இறந்ததால் சி.பி.ஐ போலீஸார் பெரும் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கின்றனர்.


    

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள குப்பநந்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகேசன் - கண்ணகி. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நெடுநாள்களாகக் காதலித்து வந்துள்ளார்கள். இவர்களது காதல் விவகாரம் வெளியில் தெரியவர, இரு சமுதாயத்தினரிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனால், கடந்த 2003-ம் ஆண்டு இருவரும் ஊரைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டார்கள். இதையறிந்த இரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் முறைப்படி திருமணம் செய்துவைப்பதாக ஆசை வார்த்தைக் கூறி இருவரையும் அழைத்து வந்து காதில் விஷத்தை ஊற்றி இருவரையும் கொலைசெய்து சடலத்தைத் தனித்தனியாக எரித்துவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கு சி.பி.ஐ போலீஸாருக்கு மாற்றப்பட்டு, கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய சாட்சியாகக் கருதப்பட்ட புதுகூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் விஷம் குடித்து மர்மமான முறையில் இறந்துள்ளார். இதனால் சி.பி.ஐ போலீஸார் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.               

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement