Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அனிதா தற்கொலைக்கு கையாளாகாத மாநில அரசுதான் காரணம்!' - மு.க.ஸ்டாலின் சாடல்

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், 'இந்தத் தற்கொலைக்குக் கையாளாகாத மாநில அரசுதான் காரணம் என்பதில் சந்தேகமே இல்லை' என்று தெரிவித்தார்.  

மு.க.ஸ்டாலின்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டைத் தூக்கும் தொழில் செய்து வருகிறார். ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.5. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட்-ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட அனிதாவுக்கு நீட் தேர்வு பெரும் இடியாக விழுந்தது.

நீட் தேர்வின் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரும் மனுவை, சில மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளனர் என்றும், இந்த மனுவை அவசர மனுவாகக் கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் முறையிட்டார். இந்த மனுவில் எதிர் மனுதாரராக அனிதா சேர்க்கப்பட்டார். அப்போது, ''நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தால், தனக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவ இடம் கிடைக்காமல்போகும்; மருத்துவராகும் கனவு பறிபோய்விடும்" என உச்ச நீதிமன்றத்தில் அனிதா மனு அளித்தார்.

ஆனால், நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கவுன்சலிங் நடைபெற்றது. இதனால் மனமுடைந்த அனிதா தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 'அனிதாவின் தற்கொலை செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தி.மு.க சார்பில் அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ப்ளஸ் டூ-வில் 1176 மதிப்பெண்களும் 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்களும் பெற்ற மாணவி அனிதா மருத்துவச் சீட்டு கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தார். நீட் தேர்வால் அவர்  வாய்ப்பு பறிக்கப்பட்ட பின் உச்ச நீதிமன்றத்தை நாடினார். என்னையும் அவர் சந்தித்து சட்டப் பேரவையில் இந்தப் பிரச்னையை எழுப்புமாறு கேட்டுக்கொண்டார். அதை நான் செய்தேன். இருப்பினும் அவர் எண்ணம் ஈடேறவில்லை. இதைப் போன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்று அனைத்து மாணவர்களையும் தயவுகூர்ந்து வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தற்கொலைக்குக் கையாளாகாத மாநில அரசுதான் காரணம் என்பதில் சந்தேகமே இல்லை' என்று தெரிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement