Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’இந்த இழப்பைக் கடந்துசெல்ல முடியவில்லை!’ - கலங்கும் அரியலூர் திமுக மா.செ

அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை 'மத்திய அரசின் திட்டமிட்ட கொலை’ என்று தி.மு.க-வின் அரியலூர் மாவட்டச் செயலாளர் சிவசங்கர் கூறியுள்ளார்.

anitha
 

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.5. நீட் தேர்வு எழுதிய அனிதாவுக்கு கட்-ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது.

மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட அனிதா, நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கவுன்சலிங் நடைபெற்றதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

anitha
 

அனிதாவின் மரணம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அனிதாவுக்காக முதன்முதலில் குரல்கொடுத்து, நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் அளவுக்கு அனிதாவுக்கு உறுதுணையாக இருந்தவர் தி.மு.க அரியலூர் மாவட்டச் செயலாளர் சிவசங்கர்

அனிதாவின் மரணம் குறித்து நம்மிடம் பேசிய சிவசங்கர் ‘அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை மத்திய அரசின் திட்டமிட்ட கொலை. அனிதாவை ஒராண்டு நீட் பயிற்சி வகுப்பில் சேர்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால், அனிதாவின் தந்தை “அனிதா படிச்சதெல்லாம் போதும். நீட் வகுப்பு எல்லாம் வேணாம்” என்று குடும்பச் சூழல் காரணமாக விரக்தியுடன் கூறினார். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வந்த அனிதாவின் இந்த முடிவு அதிர்ச்சியளிக்கிறது. 

anitha
 

இந்த இழப்பைக் கடந்துசெல்ல முடியவில்லை. மத்திய அரசு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறது. இன்னும் பல அனிதாக்கள் வெளியே தெரியாமல் இருக்கிறார்கள். அனிதாவின் மரணமே கடைசி மரணமாக இருக்க வேண்டும்’ என்று முடித்தார். அனிதாவின் வீட்டுக்குச் சென்ற சிவசங்கர் அனிதாவின் சடலத்தைப் பார்த்து கதறி அழுதார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement