வெளியிடப்பட்ட நேரம்: 21:55 (01/09/2017)

கடைசி தொடர்பு:21:55 (01/09/2017)

மதுரை அரசு சட்டக்கல்லூரியில் கலையரங்கம், நூலகக்கட்டடம் அடிக்கல் நாட்டு விழா!

மதுரை அரசு சட்டக்கல்லூரிக்கு புதிதாக கலையரங்கம் மற்றும் நூலகக்கட்டடம் அடிக்கல் நாட்டு விழா இன்று  நடந்தது.

மதுரை சட்டக்கல்லூரியில் நடந்த இந்த அடிக்கல் நாட்டு விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் முன்னிலையில், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அடிக்கல் நாட்டினார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நிஷாபானு, ஜெகதீஷ்சந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர். புதிய கலையரங்கம் மற்றும் நூலகக் கட்டட கட்டுமானப் பணிக்காக 8.37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டக்கல்லூரி

இந்தப் புதிய கட்டடத்தின் தரைத்தளத்தில் நூலகக் கட்டடம், படிக்கும் அறைகள், புத்தக அலமாரிகள், நூலக அறை, பொருள் வைப்பறை, பொருள் பாதுகாப்பறை மற்றும் ஆண்கள் பெண்களுக்கான தனித்தனி கழிப்பறை வசதிகள் உள்ளன. முதல் தளத்தில் கலையரங்கமும் அமைக்கப்பட உள்ளது.  இந்தக் கலையரங்கத்தில் 500 நபர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் மேடையுடன் கூடிய ஒப்பனை அறைகள், தரைத்தளம் மற்றும் முதல் தளத்துக்கு லிப்ட் வசதியும், நூலகம், கலையரங்கம் முழுவதும் ஏசி வசதியும், எல்.சி.டி திரை ஒளிபரப்பும் அமைக்கப்படவுள்ளது.

அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் செய்தியாளர்கள், அ.தி.மு.க உட்கட்சி பிரச்னை பற்றி கேள்வி கேட்க முயன்றபோது, பதில் ஏதும் சொல்லாமல் கும்பிட்டபடி வேகமாக சென்றுவிட்டார். இந்த நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்ட பேனர்களில் அமைச்சர்கள் செல்லூர் ராஜுக்கும், உதயகுமாருக்கும் இடையேயான கோஷ்டிப்பூசல் நன்றாக வெளிப்பட்டதாக விழாவுக்கு வந்த கூட்டம் சலசலத்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க