ராமேஸ்வரம் கோயிலில் கிரண்பேடி சாமி தரிசனம்!

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்று ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று இரவு ராமேஸ்வரம் வந்திருந்தார். வரும் வழியில் பேய்க்கரும்பில் உள்ள டாக்டர் அப்துல்கலாம் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து கலாம் நினைவிடத்தில் காட்சி படுத்தப்பட்டுள்ள சிலைகள், ஓவியங்கள், புகைப்படங்கள், கலாம் பயன்படுத்திய பொருள்களை பார்வையிட்டார். இதன்பின் ராமேஸ்வரம் சென்ற கிரண்பேடி இன்று காலை தனுஷ்கோடி அரிச்சல்முனைப் பகுதிக்குச் சென்றார். அங்கு சிறப்பு பூஜை நடத்தி வழிபாட்டில் ஈடுபட்டார்.

ராமேஸ்வரம் கோயிலில் கிரண்பேடி

இதைத்தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்றார். கோயில் நிர்வாகத்தின் சார்பில் இணை ஆணையர் மங்கையர்கரசி மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் கிரண்பேடியை வரவேற்றனர். அதைத் தொடர்ந்து சுவாமி அம்பாள் சந்நிதிகளில் தரிசனம் செய்தார். பின்னர் உலகப் புகழ் பெற்ற ராமேஸ்வரம் கோயிலின் மூன்றாம் பிராகாரத்தைப் பார்த்து ரசித்தார். சுவாமி தரிசனம் முடித்த பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு அன்னதானம் செய்தார்.

துணை நிலை ஆளுநர் கிரண்பேடியுடன் அவரது ஆலோசகர் டாக்டர் அமிர்தா, வருவாய் கோட்டாட்சியர் பேபி, ராமேஸ்வரம் துணை வட்டாட்சியர் அப்துல்ஜபார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!