மதுரையில் கோமாரி நோய் தடுப்பு நடவடிக்கை

கோமாரி நோய் (காணை நோய்) தடுப்புத்திட்டத்தை மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் இன்று வாடிப்பட்டி அருகே சித்தலாங்குடியில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, ‘இன்று முதல் வருகிற இருபதாம் தேதிவரை மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மாடுகளுக்கு காணை நோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் மற்றும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து 71 குழுக்கள் அமைக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு குழுவாலும் ஒருநாளுக்கு 150 மாடுகளுக்கு தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்படும். தடுப்பூசி போடுவதற்காக மருந்து மற்றும் உபகரணங்கள் இருப்பில் உள்ளது. 

கால்நடை

இந்த நோய் தாக்குதலால் கறவை மாடுகளில் பால் உற்பத்தி முழுவதுமாகக் குறைந்து, பால் உற்பத்தியே நின்றுபோகும் நிலை உண்டாகும். இளங்கன்றுகள் இறந்து போய்விடும். மேலும், கறவைப் பசுக்களில் மலட்டுத்தன்மை ஏற்படும். கிராமப்புற பொருளாதார வளர்ச்சியில் கால்நடைகளின் பங்கு முக்கியமானதாகும். எனவே, மாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்தக் காணை நோயை தடுப்பதற்கான தடுப்பூசியை அனைத்து மாடுகளுக்கும் போட வேண்டும்’ என்று கிராம மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!