வெளியிடப்பட்ட நேரம்: 23:40 (01/09/2017)

கடைசி தொடர்பு:23:40 (01/09/2017)

'இது ஒரு அச்சுறுத்தல்!'- ட்விட்டரில் அமலா பால் எதைக் குறிப்பிடுகிறார்

அமலா பால்


'மைனா' பட புகழ் நாயகி, அமலா பால், 'தலைவா' படத்தில் நடிக்கும்போது, அந்தப் படத்தின் இயக்குநர் விஜயைத் திருமணம் செய்துகொண்டவர். சில மனஸ்தாபங்களால், இருவரும் பரஸ்பரம் விவாகரத்துப் பெற்றனர். அதன்பிறகு, பல படங்களில் கமிட்டாகி நடித்துவருகிறார். அப்படி அவர் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் விஐபி 2. 


இதற்கிடையில், பல சினிமா பிரபலங்களைப் போலவே அவ்வப்போது பல விஷயங்களை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிந்து வருகிறார்கள். அந்த வரிசையில், சமீபத்தில், நடிகை அமலாபால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 'இன்டர்நெட் அடிக்ஷன்' பற்றிய செய்தியைப் பகிர்ந்துள்ளார். இதைப் பற்றி அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில் ஒரு போட்டோவையும் இணைத்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் உலகிலுள்ள எந்த நாடுகள் இன்டர்நெட்டை அதிகம் பயன்படுத்துகின்றன என்கிற சர்வே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இன்ஃபோகிராஃபிக்சில் இன்டர்நெட் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது என்கிறது தெரிவிக்கப்படுகிறது. 


'இன்டர்நெட் பயன்படுத்துவோரில் சீனாவை விட இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. நம்முடைய எதிர்கால தலைமுறையைப் பற்றி நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. இது தற்கால அச்சுறுத்தல்' எனவும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க