Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனிதாவின் தந்தைக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் ஆறுதல்..!

மருத்துவத்தில் சேர முடியாத காரணத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் தந்தையை,  நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 


நீட் தேர்வுக்கு எதிராகவும், ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்தவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார், மாணவி அனிதா. ஆனால், அந்த வழக்கில் நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவக் கலந்தாய்வு நடத்தவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ப்ளஸ் டூ தேர்வில் அனிதா 1,176 மதிப்பெண் எடுத்திருந்தும் மருத்துவத்தில் சேர முடியாமல் போனது. இதனால், மனமுடைந்த அனிதா நேற்று தற்கொலை செய்துகொண்டார்.

அவருடைய இறப்பு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அனிதாவின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், அரியலூருக்குச் சென்ற ஜி.வி.பிரகாஷ்குமார் அனிதாவின் தந்தையை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement