Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"அனிதா மரணத்தை முன்வைத்து உடனடியாக நீட் தேர்வை நீக்க வேண்டும்" டாக்டர் ரவீந்திரநாத் #NEETKilledAnitha

மருத்துவக்கல்வியில் இடம் கிடைக்காமல் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணம்குறித்து அதிர்ச்சி தெரிவித்த சமூக நீதிக்கான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவீந்திரநாத் தெரிவிக்கையில், "நீட் நுழைவுத்தேர்வு அமுல்படுத்தியதன் காரணமாக தமிழ்நாட்டில் ஏராளமான மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி பாதிக்கப்பட்டவர்களில் அனிதா என்கிற மாணவி இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது வருத்தமளிக்கிறது, வேதனையளிக்கிறது. அவர்தம் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அனிதாவின் இந்தத் தற்கொலைக்கு மத்திய அரசும் மாநில அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டமன்றத்தில் இரண்டு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அவற்றுக்கு மத்திய அரசு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதலைப் பெற்றுத்தரவில்லை. இந்த ஒரு ஆண்டுக்கு மட்டும் விலக்குகோரி ஒரு புதிய மசோதாவை நிறைவேற்றி அனுப்புங்கள் என்று மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படி அனுப்பப்பட்ட அவசரச் சட்டத்துக்கும் மத்திய அரசு ஒப்புதலும் அளிக்கவில்லை. அதன் காரணமாக மத்திய மாநில அரசுகள் மாணவர்களை கடைசிவரை காக்க வைத்து கழுத்தை அறுத்துவிட்டனர். இறந்த மாணவியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டினை வழங்கிடவேண்டும். உடனடியாக நீட்டிலிருந்து தமிழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு நிரந்தர விலக்கு வழங்கிட வேண்டும். தமிழகத்தில் உள்ள மருத்துவப் படிப்பு இடங்களை முழுமையாக தமிழக மாணவர்களுக்கே வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement