Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”அனிதா மரணத்துக்கு நீதி வேண்டும்” போராட்டத்தில் குதித்த புதுச்சேரி மாணவர்கள்

அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதற்கு நீதி கேட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் இளைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

அனிதா

‘நீட்’ தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூரைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகம் முழுக்க கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. சமூக ஏற்றத் தாழ்வுகளை உடைக்கும் ஒரே ஆயுதம் கல்வி ஒன்றுதான் என்று சொல்லப்பட்டாலும், நடைமுறை வாழ்க்கையில் அது நடக்காத ஒன்று என்பதை தனது தற்கொலையின் மூலம் உரக்கச் சொல்லிச் சென்றிருக்கிறார் அனிதா. அவரது மறைவுக்கு பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அனிதா

இந்நிலையில் அனிதாவின் மரனத்துக்கு நீதி கேட்டு போராட்டத் தீயை மூட்டியிருக்கிறார்கள் புதுச்சேரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள். போராட்ட இளைஞர்களிடம் பேசினோம், ”சகோதரி அனிதாவின் தற்கொலை அரசின் திட்டமிட்டப் படுகொலை. அவரின் மரணத்துக்கு இந்த அரசு என்ன பதிலை சொல்லப்போகிறது? வாக்களித்து ஆட்சியில் அமர வைத்த குற்றத்துக்காக இவர்கள் செய்யும் அனைத்து விஷயத்திலும் நாம் அமைதியாகக் கடந்து சென்றுவிட வேண்டுமா?

புதுச்சேரி

அனிதாவின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். புதுச்சேரியில் தொடங்கிய இந்தப் போராட்டத்தை தமிழகம் முழுக்க இருக்கும் எங்கள் சகோதர சகோதரிகள் முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இன்று அமைதியான வழியில் எங்கள் சகோதரிக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறோம். காலையில் இருந்து எங்கள் தொடர் போராட்டத்தைத் தொடங்குவோம்” என்று ஆவேசமாக தெரிவித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement