Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு அனிதாவின் உடல் ஒப்படைப்பு..!

மறைந்த மாணவி அனிதாவின் உடல் உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 


ப்ளஸ் டூ தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்த மாணவி அனிதா, நீட் தேர்வு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்தவேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து நீட் தேர்வின் அடிப்படையில் தமிழக அரசு மருத்துவக் கலந்தாய்வையும் நடத்திவருகிறது. அதனால், மனமுடைந்த அனிதா தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இறந்த மாணவியின் உடலை காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் சென்றிருந்தனர். அவரது உடல் அரியலூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு நடத்தப்பட்டது. உடற்கூறு ஆய்வு முடிவடைந்த பின்னர், அனிதாவின் உடல் நள்ளிரவில் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக, அனிதாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement