வெளியிடப்பட்ட நேரம்: 06:08 (02/09/2017)

கடைசி தொடர்பு:16:06 (02/09/2017)

அனிதாவின் தற்கொலை அரசபயங்கரவாதம் - சிவகார்த்திகேயன் முதல் ஜஸ்டின் பிரபாகரன் வரை #NEETkilledAnitha

 வறுமையைவென்று தலைநிமிர்ந்து மருத்துவராக வாழவேண்டும் என்று ஆசைப்பட்ட ஏழை மாணவி அனிதா. ஒவ்வொரு நாளும் எதிர்காலம் குறித்து கனவுகண்டு, அதை நினைவாக்க கல்வி ஒன்றே வழி என்று உணர்ந்து கண்ணும் கருத்துமாய் படித்து இந்த ஆண்டு பொதுத்தேர்வில் ப்ளஸ் டூ வகுப்பில் 1176 மதிப்பெண்கள் வாங்கியிருந்தார். ஆனால், மத்திய அரசு கொண்டுவந்துள்ள 'நீட்' நுழைவுத்தேர்வில் அவரால் போதிய மதிப்பெண்களைப் பெறமுடியவில்லை. காரணம் கல்வித்திட்டம். சிபிஎஸ்சி கல்வியின் அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாநில கல்வியில் படித்தவர்களால் சரியான விடையளிக்க முடியவில்லை. மேலும், மாநில அரசும் நீட் தேர்வு இந்த ஆண்டு கண்டிப்பாக இருக்காது என்றும் தேவையற்ற நம்பிக்கைகளை விதைத்தபடியே இருந்தது. தன் வாழ்க்கையை கல்வி மட்டுமே மாற்றும் என்று நம்பிய ஒரு எளிய கிராமத்து பெண்ணின் கனவு கிழித்தெறியப்பட்டது. சூழலை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை முடிவை அந்தப் பெண் எடுத்துவிட்டார். அனிதாவின் மரணம் பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியையும், குற்றவுணர்ச்சியையும் தூண்டிவுள்ளது. தமிழ் திரைத்துறையின் சார்பில் தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் விஷால் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் டிவிட்டரிலும், கமல்ஹாசன் செய்தியாளர்களிடமும் தங்கள் வருத்தங்களையும்,கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர். இந்நிலையில், டிவிட்டரில் சில திரைப்பிரபலங்கள் அனிதாவின் மரணம் குறித்து தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.  

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்

அனிதாவின் மரணம் ஜி.வி.பிரகாஷ்க்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது உணரமுடிகிறது. தொடர்ந்து அது தொடர்பாக நாலைந்து டிவிட்களை எழுதி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், உடனடியாக அனிதாவின் வீட்டுக்கே சென்று அவரது தந்தைக்கு ஆறுதல் கூறியுள்ளார். அனிதாவின் சொந்த ஊரான குழுமூருக்குச் சென்று வந்தபின் ஒரு வீடியோவும் பேசி வெளியிட்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் அதில் "இதுவே கடைசி தற்கொலையாக இருக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.  

ஜி.வி.பிரகாஷ்

 

டிடி.திவ்யதர்ஷினி

"இவ்வளவு படித்தும் இப்படி செய்து விட்டாயே" என அனிதாவிடம் கேட்டிருக்கும் டிடி தனது இரண்டாவது டிவிட்டில் "இது தேசத்தின் தோல்வி" என்று தெரிவித்துள்ளார். 

டிடி

இயக்குநர் பா.ரஞ்சித்

சமூக நீதி தொடர்பாக தொடர்ந்து எழுதியும் பேசியும் வரும் இயக்குநர் ரஞ்சித்,  "ஒரு தலைமுறையின் பெருங்கனவை இந்த தேசம் சிதைத்துள்ளது" என்று தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார். 

பா.ரஞ்சித்

நடிகர் சிவகார்த்திகேயன்

இந்த தேசம் 'தகுதி' உள்ள நல்ல மருத்துவரை இழந்துவிட்டது என்று தகுதி என்கிற சொல்லுக்கு அழுத்தம் கொடுத்து அனிதாவுக்கு இரங்கல்களைத் தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன்

நடிகை வரலட்சுமி

இப்படி ஒரு கல்வி முறை கட்டாயம் தேவைதானா? என்று கேள்வி எழுப்பியுள்ள வரலட்சுமி அனிதாவின் குடும்பத்துக்காக வருந்துவதாக தெரிவித்துள்ளார். மேலும், "அனிதாவை கொன்றது நீட்தான்" என்கிற பொருள்தரும் #NEETkilledAnitha என்கிற ஹேஸ்டேகையும் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வரலட்சுமி

இயக்குநர் ராம் 

அரசியல் கருத்துகளும் விமர்சனங்களும் நிறையக்கொண்டிருக்கும் இயக்குநர் ராம் அனிதாவின் தற்கொலை என்பது நீட் செய்த 'அரச பயங்கரவாத' நடவடிக்கை என்று காட்டமாக தெரிவித்துள்ளார். அவரின் கனவை கொன்றுவிட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.  

இயக்குநர் ராம்

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்

முதலில் அரசியல்வாதி ஆவதற்குதான் நீட் தேர்வு வைக்கவேண்டும் என்று கூறியுள்ள ஜஸ்டின் பிரபாகரன் அனிதாவின் மரணம் சட்டத்தின் துணையுடன் செய்யப்பட்ட படுகொலை என்று காட்டமாக தெரிவித்துள்ளார். 

ஜஸ்டின் பிரபாகரன்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க