Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனிதாவுக்காக மெரினாவில் போராட்டம்? காற்றுவாங்க வந்தவர்களைக் கூட துரத்திய போலீஸார்...#NEETKilledAnitha

மாணவி அனிதா மரணம் தமிழகத்தில் மீண்டும் ஒரு போராட்ட உணர்வை தட்டி எழுப்பி இருக்கிறது. மறியல், ஆர்ப்பாட்டம், கடையடைப்பு என போராட்ட வடிவங்கள் களம் காணத்தொடங்கி விட்டன.

அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு மெரினாவில் போராட்டம் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு பின்னர் வழக்கமாகவே இரவு 11 மணிக்கு மேல் மெரினா மணற்பரப்புக்கு செல்வதற்கு அனுமதிப்பதில்லை. வெள்ளிக்கிழமை இரவும் (செப்டம்பர் 1-ம் தேதி) காமராஜர் சாலையின் சில பகுதிகளில் தடுப்புகளை ஏற்படுத்தி வாகனங்களை அனுமதிக்கவில்லை. வழக்கமாக மெரினாவில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸார் வெள்ளிக்கிழமையன்றும் மெரினாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

கடற்கரை மணற்பரப்பில் வழக்கம்போல தூங்கிக்கொண்டிருந்தவர்களை மட்டும் போலீஸார் அனுமதித்தனர். மெரினாவுக்கு காற்று வாங்குவதற்கும் வந்தவர்களை, இங்கே நிற்காதீர்கள் வீட்டுக்குச் செல்லுங்கள் என்று அறிவுறுத்தி அனுப்பிக் கொண்டிருந்தனர்.
மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அது திரும்பப் பெறப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement