Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வைகை ஆற்றை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி சுத்தம் செய்ய உத்தரவு !

வைகை

 

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார் அதில்" வைகை நதியில் 452 -க்கும் அதிகமான இடங்களில் கழிவு நீர் கலந்துவருகிறது. அதனால்  வைகை ஆறு கடுமையாக மாசுபடுகிறது. எனவே, அதைத் தடுத்து, வைகை ஆற்றை தூய்மைப்படுத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.  வைகையை தூய்மைப்படுத்த பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வைகை ஆறு

இந்தக்குழுக்கள் மூலம் வைகை நதியை தூர்வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற பணிகளைப் போர்கால அடிப்படையில் மேற்கொண்டு செப்டம்பர் 18-ல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் மேலும் மதுரை மாநகராட்சி எல்லையில் வைகை நதி, கால்வாய்கள் மற்றும் நீர் நிலைகளில் மருத்துவக் கழிவுகள் மற்றும் பிற கழிவுகளைக் கலக்கும் நிறுவனங்ளுக்கு நோட்டீஸ் அனுப்பி அபராதம் வசூலிக்க வேண்டும். தொடர்ந்து கழிவுகளை கலக்கவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமத்தை ரத்துசெய்ய மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு அது தொடர்பாக செப்டம்பர் 18-ல் அறிக்கை தாக்கல்செய்ய மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement