Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு தொடரும் போராட்டங்கள்!

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது.

anitha neet
 

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதா. இவரின் தந்தை திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளி. ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.5. நீட் தேர்வு எழுதிய அனிதாவுக்கு கட்-ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது.

மருத்துவர் ஆக வேண்டும் என்பதே அனிதாவின் கனவாக இருந்தது. உச்சநீதிமன்றம் வரை சென்று நீட் தேர்வுக்கு எதிராக போராடினார். அவரின் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் போராட்டங்கள் தோல்வியில் முடிந்தது. நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கவுன்சிலிங் நடைபெற்றது. இதனால் மனமுடைந்த மாணவி அனிதா, நேற்று தற்கொலை செய்துகொண்டார். அனிதாவின் தற்கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.



anitha

 

அனிதாவின் மரணத்துக்கு நீதிக் கேட்டு அரியலூர், மதுரை, சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு அண்ணா சாலையில் தமிழ்நாடு மாணவர், இளைஞர்கள் இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கீழ்பாக்கத்திலும் போராட்டம் நடக்கிறது. அரியலூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் கௌதமன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்  குழுமூரில் மக்கள் மோடியின் உருவ பொம்மை எரித்து சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரியலூர் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement