விவேகம் முதல் அண்ணா பல்கலைக்கழகம் வரை டெக்னாலஜிதான் ஃபோகஸ்! #TechTamizha - செப்டம்பர் இதழ் | Tech tamizha monthly e-book September edition

வெளியிடப்பட்ட நேரம்: 13:08 (02/09/2017)

கடைசி தொடர்பு:13:08 (02/09/2017)

விவேகம் முதல் அண்ணா பல்கலைக்கழகம் வரை டெக்னாலஜிதான் ஃபோகஸ்! #TechTamizha - செப்டம்பர் இதழ்

ன்பிற்கினிய டெக் தமிழா வாசகர்களே!

செப்டம்பர் மாத டெக் தமிழா இதழ் வெளிவந்துவிட்டது. கடந்த இதழ்களைப் போலவே உங்களுக்கு விருப்பமான கட்டுரைகளுடன் மலர்ந்திருக்கிறது இந்த மாத இதழ்.

தொழில்நுட்ப துறையில் வளர்ந்துவரும் விஷயங்களில் ஒன்று பிக் டேட்டா. வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் பல்ஸை சரியாகக் கணிக்க உதவுவதுதான் இந்த பிக் டேட்டா. ஆனால் துல்லியமான முடிவுகளை எடுக்க பிக் டேட்டா சொல்வதை மட்டுமல்ல; இன்னொருவர் சொல்வதையும் கேட்க வேண்டும்? அவர் யார்? அவரைப் பற்றிய கட்டுரையை டெக் தமிழாவில் படியுங்கள்.

விவேகம் படத்தில் அஜித்தும், காஜலும் கண்களால் பேசிக்கொள்வார்களே? அந்த மோர்ஸ் கோடு எப்படி வேலை செய்கிறது தெரியுமா? இதனை விளக்குகிறது விவேகம் டெக்னாலஜி பற்றிய கட்டுரை. 

டெக் தமிழா செப்டம்பர்

     இதழை டவுன்லோட் செய்ய: https://goo.gl/fQ111L 

பலநூறு ராணுவ வீரர்களை அனுப்பி, தீவிரவாதிகளைக் கொல்வதை விடவும் மிக சிக்கனமான முறை, ட்ரோன்களை அனுப்பி வான்வழித் தாக்குதல் நடத்துவது. ஆனால் அதிலும் இப்போது ஒரு சிக்கல். மிக எளிதாக ட்ரோன்கள் எதிரிகளின் கண்களில் சிக்கிவிடுகின்றன. இதனால் வழியிலேயே ட்ரோன்களை அழித்துவிட வாய்ப்பிருக்கிறது. இதனைத் தவிர்க்க என்ன செய்யலாம்? இதற்காகத்தான் ஸ்வார்ம் ட்ரோன்கள் எனப்படும் புதிய வகை ட்ரோன்கள் பற்றி ஆராய்ச்சிகள் செய்துவருகின்றனர் விஞ்ஞானிகள். அந்த ஸ்வார்ம் ட்ரோன்கள் பற்றிய விரிவான கட்டுரையும் இந்த இதழில் இடம்பெற்றுள்ளது.

இதுவரை வந்த சீசன்களிலேயே இதுதான் பெஸ்ட் சீசன் என கேம் ஆப் த்ரோன்ஸ்-ஐ கொண்டாடுகின்றனர் ரசிகர்கள். ஆனால் இந்த மகிழ்ச்சியை HBO-வைக் கொண்டாட விடாமல் செய்துவிட்டனர் ஹேக்கர்கள். GoT எபிசோட் லீக், HBO சர்வர்கள் ஹேக் என கிலி கிளப்பினர் ஹேக்கர்கள். இருவருக்கும் இடையே என்னதான் நடந்தது? விளக்குகிறது டெக் தமிழாவின் கவர் ஸ்டோரி.

பட்ஜெட் மொபைல்கள், ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள், ஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷன் என டெக் உலகில் பரபரப்பாகவே இருந்தது ஆகஸ்ட். ஐபோன் அறிவிப்புகள், கூகுளின் பிக்ஸல் என்ட்ரி உள்பட இந்த மாதமும் நிறைய நிகழ்வுகள் காத்திருக்கின்றன. அவற்றுடன் அடுத்த இதழில் சந்திப்போம். தொடர்ச்சியான டெக் செய்திகளுக்கு விகடன் தளத்துடன் இணைந்திருங்கள்.

வழக்கம்போல உங்கள் விமர்சனங்களை கமென்ட்ஸ் மூலமாக, அல்லது #TechTamizha என்ற ஹேஷ்டேக் மூலமாக எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். 

இதழை டவுன்லோட் செய்ய : https://goo.gl/fQ111L 

நன்றி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்