Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு திருச்சியில் இளைஞர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்!

அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டு திருச்சியில் இளைஞர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்

அனிதாவின் மரணம் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அனிதாவின் தற்கொலைக்கு விசாரணைக்குழு அமைக்கவும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும்  திருச்சி கி.ஆ.பெ. அரசு மருத்துவk கல்லூரி எதிரில் அனைத்திந்திய மாணவர் மன்றம் மற்றும் திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவைச் சேர்ந்த தினேஷ், ஜீவானந்தம், சேக்அப்துல்லா, சூர்யா, ரியாத் நிஷா உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போரட்டத்தைத் தொடங்கி உள்ளனர். இதையொட்டி, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் ஜீவா, "கல்வியை மத்திய அரசின் பட்டியலிலிருந்து, மாநில அரசுக்கு மாற்ற வேண்டும். தமிழக அரசு, மத்திய அரசுக்கு ஜால்ரா தட்டுவதை நிறுத்திவிட்டு இந்த விஷயத்தில் தீவிரமாக இறங்கி மாணவர்களின் நலனைக் காக்க வேண்டும். அனிதா மரணத்துக்கு நீதி கேட்பது மட்டுமல்லாமல், மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் அனைத்து மாணவர்களுக்காகவும் போராட வேண்டும். ஐந்து பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். பல்வேறு பகுதிகளில் இருந்தும், மாணவர்கள் இங்கு வந்து எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்" என்றார் உறுதியாக.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement