Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனிதாவின் மரணம்... போராட்டத்தில் குதித்த திருப்பூர் இளைஞர்கள்..!

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு திருப்பூரிலும் போராட்டங்கள் தொடங்கியுள்ளன.

நீட் தேர்வு முறையால் பாதிக்கப்பட்ட பல ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்ற முன்னின்று சட்டப் போராட்டம் நடத்திய அனிதா இன்று நம்முடன் இல்லை.  மருத்துவக் கனவு நொறுங்கியதால் மரணத்தைத் தழுவிய அனிதாவின் சாவுக்கு காரணமாகிப்போன இந்த ஆளும் மத்திய மாநில அரசுகளின் அரக்கத்தனத்தை எதிர்த்து இன்று தமிழகம் முழுவதும் பலத்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது திருப்பூரைச் சேர்ந்த இளைஞர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், திருப்பூர் குமரன் சிலை முன்பாக தொடங்கிய இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக
திருப்பூரில் வசிக்கும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும், இளைஞர்களும் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். நீட் தேர்வுமுறையை ஒழித்துக்கட்ட வலியுறுத்தியும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், மத்திய மாநில அரசுகளை தங்களின் போராட்ட முழக்கங்களால் துழைத்து எடுத்து வருகிறார்கள் இளைஞர்கள். 

ஆனால், அரசு தரப்பு அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சியில் இருக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement