சக்தி விகடன் நடத்தும் குருப்பெயர்ச்சி ஹோமம்!

"முன்னூருக்கு வாருங்கள் முன்னுக்கு வரலாம்" இந்த வாசகம் போதும் ஆடவல்லீஸ்வரரின் அற்புதத்தைச் சொல்ல. மனிதர்களுக்கு மட்டுமல்ல, தேவர்களுக்கெல்லாம் குருவாகத் திகழும் குரு பகவானுக்கே அவர் இழந்ததைத் திரும்பக் கிடைக்கச் செய்த திருத்தலம் இது. திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் வழியில் ஆலங்குப்பம் அருகிலுள்ள முன்னூரில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது. 

குருப்பெயர்ச்சி

ஒருநாள் நவகிரகங்களில் ஒருவரான குரு பகவானுக்கு கர்வம் ஏற்பட்டது. அடுத்த கணமே தன் தேஜஸ் அனைத்தையும் இழந்துவிட்டார். அப்படியே தேவசபைக்கு சென்றபோது அவரை யாரும் பொருட்படுத்தவே இல்லை. தன் கர்வத்துக்கு கிடைத்த பலன்தான் இது என்பதை உணர்ந்துகொண்டவர், பிரம்மதேவரிடம் சென்று இழந்த ஞானம், தேஜஸ் போன்றவற்றைப் பெற பிரார்த்தித்தார்.

ஹோமம்

குருவிடம் இரக்கம் கொண்ட பிரம்மதேவர் முன்னூர் திருத்தலத்தின் மகிமைகளைக் கூறி அத்தலத்துக்குச் சென்று இறைவனை வழிபட அறிவுறுத்தினார். அதன்படி குருதேவர் இத்தலத்துக்கு வந்து ஆடவல்லீஸ்வரரை வழிபட்டு இழந்த தேஜஸை திரும்பப் பெற்றார். அதனால்தான் இங்கே  சிவபெருமான் ஞான குருவாக தெற்கு நோக்கியும், தட்சிணாமூர்த்தி மேற்கு நோக்கியும் காட்சி தருகிறார்கள். 

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் இன்று நம் சக்தி விகடன், ஆடவல்லீஸ்வரர் கோயில் திருப்பணிக்குழுவுடன் இணைந்து நடத்தும்  குருப்பெயர்ச்சி பரிகார ஹோமமும் சிறப்பு வழிபாடும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

ஆடவல்லீஸ்வரர் கோயில்

அனைவருக்கும் குருவருளும் திருவருளும் ஒருசேரக் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!