Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடி உருவ பொம்மை எரிப்பு – விஸ்வரூபம் எடுக்கும் அனிதா தற்கொலை விவகாரம்

அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழக மக்களிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக இன்று ஒட்டுமொத்த புதுச்சேரியும் போராட்டக் களமாகக் காட்சியளிக்கிறது.

புதுச்சேரி

விடுதலைச் சிறுத்தைகள்:

இந்நிலையில் 'நீட்' தேர்வு முறையைக் கண்டித்தும், உயிரிழந்த மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாயைத் தமிழக அரசு வழங்க வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வெங்கட்டசுப்பா ரெட்டியார் சிலை சிக்னல் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டனக் கோஷங்கள் எழுப்பிய அவர்கள் ‘நீட்’ தகுதித் தேர்வையும் உடனே ரத்து செய்ய வேண்டும் என்று முழங்கினர். சுமார் 200-க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் காரணமாக அங்கு பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து அவர்களைக் கைது செய்தது காவல்துறை.

அனிதா

திராவிட விடுதலைக் கழகம்:

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்றும் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை ரத்து செய்யக்கோரியும் புதுச்சேரி மாநில திராவிட விடுதலைக் கழகத்தினர் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் அமர்ந்தனர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஒதியஞ்சாலை போலீஸார் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட திராவிட விடுதலைக் கழகத்தினரை போலீஸார் கைது செய்தனர்.

அனிதா

மோடி உருவ பொம்மை எரிப்பு:

’நீட்’ நுழைவுத் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி ராஜா திரையரங்கம் சிக்னலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி

 

இந்திய மாணவர் சங்கம்:

இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் முருகா திரையரங்க சந்திப்பில் சாலை மறியல் நடைபெற்றது. புதுச்சேரியின் பிரதான சிக்னல் இது என்பதால் இங்கும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement