Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனிதாவின் மரணத்துக்குக் கண்டனக் கவிதை வாசிப்பு - இன்று மாலை சென்னையில் நடக்கிறது

அனிதா

ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்தும், நீட் தேர்வு பிரச்னையால் மாணவி அனிதாவைத் தற்கொலை செய்துகொள்ள வைத்த நிலைமையைக் கண்டித்து சென்னையில் இன்று கவிதை வாசிப்பும் கண்டனக் கூட்டமும் நடத்தப்படுகிறது. 

அனிதாவைத் தற்கொலைக்குத் தள்ளியதைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் தன்னெழுச்சியான போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் எனத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தலைநகர் சென்னையிலும் நேற்று முதலே போராட்டங்கள் நடந்துவருகின்றன. 

கமல், ரஜினி மட்டுமன்றி திரைப்பட நடிகர்கள், இயக்குநர்கள், பல்துறைக் கலைஞர்களும் அனிதாவின் மரணத்தையொட்டி தங்களின் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் கவிஞர்கள் எதிர்ப்பை கவிதை மூலமாக வெளிப்படுத்தவுள்ளனர். இத்துடன் எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கலந்துகொள்ளும் கண்டனக் கூட்டமும் நடத்தப்படுகிறது. 

சென்னை வடபழனி நூறடிச் சாலை லஷ்மன் ஸ்ருதி சந்திப்பு அருகில் உள்ள அம்பேத்கர் திடலில் இன்று மாலை 4.30-க்கு நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கவிஞரும் கலை விமர்சகருமான இந்திரன், விமர்சகர் வாசுதேவன், கவிஞர் சுகிர்தராணி, எழுத்தாளர் தமயந்தி, கவிஞர் நாச்சியாள், மனநல மருத்துவர் ஸ்ரீராம் உட்பட பலரும் பங்கேற்கின்றனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement