Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'உங்களைக் காப்பாற்றிக்கொள்ளவா ஓட்டு போட்டோம்?' - கொதிக்கும் இயக்குநர் கௌதமன்

னிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அரியலூரில் அனிதாவின் ஊரான குழுமூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் கௌதமன் உள்ளிட்டோர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அனிதாவின் உடலுக்கு கௌதமன் அஞ்சலி செலுத்தினார்.

கௌதமன்

அவரிடம் பேசினோம்,"எங்களுக்கான மருத்துவ இடங்களை நாங்கள் இழந்து நிற்கிறோம். ஆசியாவிலேயே மிகச்சிறந்த மருத்துவர்கள், எங்கள் தமிழ் மாணவர்கள்தான். எங்கள் வீட்டுப் பிள்ளை இறந்த பிறகு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, 7 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் மட்டும் போதுமா? அடுத்ததாகப் பொறியியல் மற்றும் சட்டப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு வர இருக்கிறது. இனி எங்கள் பிள்ளைகள் நீதிபதியாக முடியாது. வக்கீலாக முடியாது. வேறு சமூகத்தினர்தான் அந்த இடத்துக்கு வருவார்கள். 

துண்டறிக்கை கொடுத்ததற்கே குண்டாஸ் போட்ட அரசாங்கம்தானே இது. நாளை இவர்கள் பொறியாளர்களாகவும் வழக்கறிஞர்களாகவும், மருத்துவர்களாகவும் வந்தால் எங்களை விஷ ஊசிப் போட்டு கொல்வதற்கும் தயங்க மாட்டார்கள். நம்மை, நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். மத்திய, மாநில அரசுகள் கூட்டு சேர்ந்துதான் நம் மீது நீட்டைத் திணித்துள்ளன. கைகோர்த்துப் பதவி வாங்கத் தெரிந்த இவர்களுக்கு, மாநில உரிமையை நிலைநாட்டத் தெரியவில்லை. இதற்காகவா உங்களைக் கோட்டைக்கு அனுப்பினோம். உங்களைக் காப்பாற்றிக் கொள்ள, நாங்கள் ஓட்டுப் போடவில்லை" என்றார் கொதிப்புடன். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement