ஆசிரியர்களுக்கு வாழ்த்து மடல்! அசத்தும் மாவட்டக் கல்வி அதிகாரி!

செப் 5-ம் தேதி டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாள், ஆசிரியர் தின விழாவாகக்  கொண்டாடப்பட்டு வருகிறது. முதன் முறையாக சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி. மகேஸ்வரி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள்  அனைவருக்கும் வாழ்த்துச் செய்தி மடல் அனுப்பி வருகின்றார்.

அந்த வாழ்த்து மடலில், "வல்லரசு இந்தியாவை வடிக்கின்ற சிற்பிகளாய் மாணவ சமூகத்தை மாட்சியுடன் உருவாக்க அர்ப்பணிப்பு உணர்வோடு உழைக்கின்ற அறிவாற்றல் மிகுந்த ஆசிரியர்களே" என்கிற வாசகங்கள் அடங்கிய வாழ்த்துமடல் அனுப்பப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இதுவரைக்கும் பணியாற்றி வந்துள்ள கல்வித்துறை அதிகாரிகள் யாரும் வாழ்த்துச் செய்தி ஆசிரியர் தின விழாவிற்கு  அனுப்பியது இல்லை. இதுவே முதல் முறை என்கின்றனர் இம்மாவட்டத்தின் ஆசிரியர்கள் ." எங்களுக்கு இதுபோன்ற வாழ்த்துக்கடிதம் கிடைப்பது அரிது. நல்லாசிரியர் விருது, சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியர் வழங்கும் விருது என ஒரு சிலருக்குத்தான் கிடைக்கும். இந்த வாழ்த்து மடலையும் அதுபோன்றுதான் நினைக்கின்றோம்" என்கிறார்கள் ஆசிரியர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!