’நதிநீர் இணைப்பு’: முதல்வருடன் தமிழிசை திடீர் சந்திப்பு!

’நதிநீர் இணைப்பு தொடர்பாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தேன்’ எனத் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்தார்.

தமிழிசை

இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கிரீன் வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பா.ஜ.க தமிழகத் தலைவர் தமிழிசை சந்தித்துப் பேசினார். முதல்வர் உடனான சந்திப்புக்குப் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழிசை செளந்திரராஜன் கூறுகையில், “முதல்வர் உடன் நதிநீர் இணைப்பு விவகாரம் குறித்துப் பேசினேன்” என்றார்.

மேலும், மாணவி அனிதாவின் மரணம் குறித்து தமிழிசை பேசுகையில், “நீட் தேர்வு குறித்த முடிவுகள் அனைத்தும் உச்ச நீதிமன்றம் விதித்தது. பல மாணவர்கள் ஒரு முறை தோற்ற போதும், அடுத்தடுத்து இருக்கும் முறைகளில் முயன்று தேர்வு பெறுவோம் என்ற முயற்சியில் உள்ளனர். எந்தவொரு விஷயத்திலும் இரண்டு பக்கங்கள் இருக்கும். அதில் மாணவர்கள் ஒருபோதும் பாதகமான பக்கத்தைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. அனிதா போன்ற இழப்புகள் இனிமேலும் ஏற்படக்கூடாது என்பதே தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய வேண்டுகோளாக உள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!