Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சேலத்தில் பல இடங்களில் போராட்டம், சாலை மறியல்!

அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டியும் சேலத்தில் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலகம், ரயில்வே நிலையம், பெரியார் மேம்பாலம் என மாநகராட்சி முழுவதும் ஆங்காங்கே சாலை மறியல்களும் போராட்டங்களும் மேற்கொண்டார்கள்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே கூடிய தமிழ்நாடு மாணவர் இளைஞர் பேரவை, தி.மு.க., மற்றும் மாணவர் கழகம், சேலம் அரசு கலைக் கல்லூரி, ஏ.வி.எஸ்.,கல்லூரி, சோனா பொறியியல் கல்லூரி மற்றும் மோகன்குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என அனைவரும் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதில் பேசிய தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழரசன், 'சகோதரி அனிதாவின் மரணத்திற்கு மத்திய அரசும் கையாளாகாத மாநில அரசுமே காரணம். ஏழை, எளிய மாணவியின் மருத்துவக் கல்வியைச் சிதைத்த மாநில அரசு உடனே பதவி விலக வேண்டும். அனிதாவின் மரணத்திற்கு 7 லட்சம் ரூபாய் முதல்வர் அறிவித்து இருக்கிறார். முதல்வர் பழனிசாமியின் பையன் மரணம் அடைந்தால் பொதுமக்கள் சேர்ந்து 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் அமைதியாகி விடுவாரா? சகோதரி எதற்காக மரணித்தாரோ அந்த நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும்' என்றார்.

சேலம் ரயில்வே நிலையத்தின் எதிரே இந்திய வாலிபர் சங்கத்தின் சார்பாக சாலை மறியலில் ஈடுபட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அவர்களை போலீஸார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தார்கள். சேலம் ஆட்சியர்  அலுவலகத்தின் எதிரே தமிழக வாழ்வுரி கட்சியைச் சேர்ந்தவர்கள் கண்களில் கறுப்புத் துணிகளைக் கட்டிக்கொண்டு போராடினார்கள்.

சேலம் பெரியார் மேம்பாலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். அப்போது பேசிய ஜெயச்சந்திரன், 'ஏழை, எளிய மாணவர்கள் படிக்கக் கூடாதா? அனிதா பனிரண்டாம் வகுப்பில் 1,176 மதிப்பெண்ணும், மருத்துவ கட் ஆஃப் இல் 196.5 ம் வாங்கி இருக்கிறார்.

இதை விட வேறு என்ன தகுதி வேண்டும். நீட் தேர்வு என்பது மறைமுகமாக குலக் கல்வி முறையை அங்கீகரிக்கிறது. இந்த நீட் தேர்வு தமிழகத்திற்கு வராமல் விரட்டியடிப்போம்'' என்றார். இப்படி சேலத்தின் பல பகுதிகளில் போராட்டங்களும் சாலை மறியல்களும் நடைப்பெற்றதை அடுத்து சேலம் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement