வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (02/09/2017)

கடைசி தொடர்பு:18:45 (02/09/2017)

மலைபோல் குவிந்து கிடக்கும் ரசாயனக் கழிவு! - அச்சத்தில் கிராம மக்கள்

கரூர் மாவட்டம் மேலப்பகுதியைச் சேர்ந்த விராலிப்பட்டிக்கு உட்பட்ட  பெரும்பாறையில் தனியார் நிலமும் சில தரிசு நிலமும் உள்ளது. அந்த நிலத்தில் மலைபோல் ரசாயனக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.

கரூர்

அந்தத் தரிசு நிலத்துக்கு அருகாமையில் 'வடுவந்தருசு' என்ற குளம் உள்ளது. அந்தக் குளத்தில்தான் மேய்ச்சலுக்கு வரும் ஆடு மாடுகள் நீர் அருந்தும். தற்போது விட்டுவிட்டு மழை பெய்துகொண்டிருப்பதால் ரசாயனக் கழிவுகளின் தாக்கம் அந்தப் பகுதியில் உள்ள பெரும்பான்மையான விளை நிலத்துக்கும் தரிசு நிலத்துக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது. மேலும், அருகில் உள்ள வவ்வாக்குளம், ஊர்குளம், கருநாங்குளம் என அனைத்து நீர் ஆதாரங்களிலும் கலந்துவிடுமோ என்று அப்பகுதியில் வசித்துவரும் மக்கள்  அச்சம் தெரிவித்துள்ளனர்.

கரூர்

வடுவந்தருசு குளம் அருகே ஆடு மேய்த்துகொண்டிருந்தவர் நம்மிடம் பேசுகையில், ''இந்தப் பகுதியில்தான் நான் ஆடு மேய்க்கிறேன். ஒரு சில வாரங்களா இங்க மூட்டை மூட்டையா ஏதோ கொட்டிக் கிடக்குது. இதுல ஏதோ ரசாயனப் பொருள் இருக்குதுனு சொல்லுறாங்க. அது தண்ணீர்ல கலந்துச்சுனா என்னோட ஆட்டுக்கு நோய் வரும். இதை அப்புறப்படுத்த முடியாம தவிக்கிறோம்” என்று முடித்தார். 

கரூர்