வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (02/09/2017)

கடைசி தொடர்பு:19:15 (02/09/2017)

சென்னையில் AMG பெர்ஃபாமென்ஸ் சென்டரைத் தொடங்கியது மெர்சிடீஸ் பென்ஸ்!

 

மெர்சிடீஸ் பென்ஸ்

 

ரேஸ் டிராக்கில் இருந்து சாலைக்கு பெர்ஃபாமென்ஸ் கார்களைக் கொண்டு வந்த AMG பிராண்ட், ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக, சென்னையில் AMG பெர்ஃபாமென்ஸ் சென்டரைத் திறந்துள்ளது மெர்சிடீஸ் பென்ஸ். இதனுடன் சேர்த்து மொத்தம் 7  AMG பெர்ஃபாமென்ஸ் சென்டர்களை (டெல்லி, மும்பை, பெங்களூர், புனே, ஹைதராபாத், கொச்சி, சென்னை) இந்தியாவில் இந்நிறுவனம் வைத்திருக்கிறது. இது உலகளவில் 400-க்கும் அதிகமான அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் AMG GT R மற்றும் AMG GT Roadster எனும் 2 AMG கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளதுடன், 74 லட்சத்தில் கிடைக்கும்  CLA 45 AMG முதல் 2.47 கோடி ரூபாய்க்குக் கிடைக்கும் AMG GT S வரையிலான 12 AMG கார்களை, இந்தியாவில் இந்நிறுவனம் விற்பனை செய்வது கவனிக்கத்தக்கது.

 

mercedes benz

 

AMG கார்களின் உரிமையாளர்களாக இருப்பவர்களை மனதில் வைத்து தொடங்கப்பட்டு இருக்கும் AMG பெர்ஃபாமென்ஸ் சென்டர்களில், சிறப்பான வாடிக்கையாளர் சேவையுடன் கூடிய AMG கார்களின் சர்வீஸ் தொடங்கி, AMG பிராண்டிங்கில் இருக்கும் Merchandise & Accessories ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இதனுடன் இங்கே இருக்கும் AMG Private Lounge-ல், AMG கார்களைப் பற்றிய தங்களின் சந்தேகங்கள், அனுபவங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம். ''பெர்ஃபாமென்ஸ் கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதால், இந்தியாவில் இத்தகைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை, பென்ஸ் காரை வாங்குபவரின் சராசரி வயது 43 ஆக இருந்தது. இது தற்போது 37 வயதாகக் குறைந்திருக்கிறது. இதுவே AMG கார் என்றால், அது 30 வயதாக இருக்கிறது'' என மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் MD & CEO-வான Roland Folger கூறியுள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க