Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தூய்மையின் அடிப்படையில் பள்ளிகளுக்கு தரவரிசை' - மத்திய அமைச்சர் ஜவடேகர் அறிவிப்பு!

ஒவ்வொரு பள்ளியிலும் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிக்குத் தகுந்தாற்போல் தரவரிசை தயாரிக்கப்பட்டு விருது வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஜவடேகர். 

ஜவடேகர்


'பள்ளியில் தூய்மைப் பணி மேற்கொள்ளும்போது பள்ளி மாணவர்களின் உடல்நலன் மேம்படும், பள்ளி வருகை அதிகரிக்கும், இடைநிற்றல் குறைந்து மற்றும் கற்றல் திறனும் அதிகரிக்கும். பள்ளி மாணவர்களே தூய்மைப்பணியின் தூதர்கள்' என்கிறார் ஜவடேகர். 'பள்ளியில் குடிநீர், கழிப்பிட வசதி, பராமரிப்பு மற்றும் நன்னடத்தை மற்றும் பயிற்சி வழங்குதல் போன்றவற்றின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்' என்றும் அறிவித்து இருக்கிறார். 

இந்தத் தரவரிசைப்பட்டியலில் இடம்பிடிக்க ஆன்லைன் வழியாகப் பள்ளிகள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பட்டியல் தயாரிக்கப்பட்டு ரூ.50,000 பரிசுத்தொகையுடன் விருது வழங்கப்படும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டுக்கான விருது பெற்றதில் தமிழ்நாடு முதல் இடத்தையும், ஆந்திரா, ராஜஸ்தான் மாநிலங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தன. அடுத்த ஆண்டுக்கான விருது பெற அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement