சென்னையில் தனது புதிய ஸ்டோரைத் திறந்தது ஜியோமி

ஜியோமியின் புதிய ஸ்டோர்

ஜியோமி நிறுவனத்தின் மொபைல்கள்  இதுவரை  ஆன்லைனிலும் வேறு சில  ஸ்டோர்களில் மட்டுமே கிடைத்து வந்தது. இந்நிலையில் வாடிக்கையாளர்களைக் கவரவும் மொபைல் வாங்கும் அனுபவத்தை மேம்படுத்தவும்  இந்தியாவின் முக்கிய நகரங்களில் Mi Home எனப்படும் ஸ்டோர்களை அமைத்து வருகிறது அந்நிறுவனம். பெங்களூரு, குர்கானுக்கு அடுத்த படியாக சென்னை வடபழனியில் இருக்கும் ஃபோரம் விஜயா மாலில் தனது Mi Home ஸ்டோரை இன்று ஆரம்பித்திருகிறது ஜியோமி. தொடக்கநாள் சலுகையாக மொபைல் முன்பதிவு செய்பவர்களுக்கு 599 ரூபாய்  மதிப்புள்ள இயர்போனை பரிசாக அளித்தது அந்நிறுவனம். ஜியோமி நிறுவனத்தின் மொபைல்கள் மற்றும் இதர  தயாரிப்புகள் அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கும் அதே விலையில் இங்கே விற்பனை செய்யப்படுகிறது.

ஜியோமி நிறுவனத்தின் மொபைல்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றாலும் ஆன்லைனில் வாரத்துக்கு ஒரு முறைதான் விற்பனை. அப்படியே வந்தாலும் ஸ்டாக் விரைவில் தீர்ந்துவிடும் என்பது போன்ற பல குறைகள் இருந்தன. அதை இது போன்ற ஸ்டோர்கள் அமைப்பதன் மூலமாக அக்குறையைத் தீர்ப்பதற்கு முயல்கிறது. சீனாவுக்கு அடுத்ததாக இந்தியாவை முக்கிய மொபைல் சந்தையாகக் கருதும் ஜியோமி மொபைல்கள் மட்டுமின்றி Air filter, Backpack போன்ற தயாரிப்புகளையும் படிப்படியாக அறிமுகப்படுத்தி வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!