Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”தீபாவளி வசூலில் ஈடுபட்டால் டிஸ்மிஸ்”: புதுச்சேரி போலீஸை எச்சரித்த முதல்வர்!

”போலீஸ்காரர்கள் நோட்டைத் தூக்கிக்கொண்டு கடை கடையாய் ஏறி வசூல் வேட்டை நடத்தினால் உடனடியாக அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்” என்று புதுச்சேரி போலீஸாருக்கு முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி

இதுகுறித்து புதுச்சேரி மக்கள் கூறுகையில், “ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் வருகிறது என்றாலே காவல் நிலையம், மின் துறை, தீயணைப்புத் துறையினருக்குக் கொண்டாட்டம்தான். பெரிய நிறுவனங்கள் தொடங்கி பெட்டிக் கடைகள் வரை நோட்டு போட்டு வசூல் வேட்டையை நடத்தி முடித்துவிடுவார்கள். குறிப்பாக காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையங்களில் இதற்காக ஏலமே நடத்தப்படும். அனைத்துத் துறைகளிலும் இது நடந்தாலும் போலீஸ் ஸ்டேஷன்தான் இப்படியான வசூலில் முன்னிலையில் இருக்கும். போலீஸ் உயர் அதிகாரிகள் கடுமையாக எச்சரிக்கை விடுத்தாலும் அதனைக் கண்டு கொள்ளாமல் வசூலை முடித்துவிடுவார்கள்” எனப் புலம்புகின்றனர்.

இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “ஆயுத பூஜை மற்றும் தீபாவளிப் பண்டிகைகள் நெருங்கி வருகிறது. அதைப் பயன்படுத்தி போலீஸ், தீயணைப்புத் துறை மற்றும் அரசு ஊழியர்களில் ஒரு பிரிவினர் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ்காரர்கள் நோட்டை தூக்கிக் கொண்டு கடை கடையாய் ஏறி வசூல் வேட்டை நடத்தினால் உடனடியாக அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்” என்று எச்சரித்திருக்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement