Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நொய்யலாற்றில் விழுந்த திருப்பூர்வாசி..! ஆளைத்தேடும் காவல்துறை.!

நொய்யல் ஆறு

திருப்பூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட தரைப் பாலத்தின் வழியே சென்ற ஒருவர், நொய்யலாற்றில் விழுந்து மாயமாகி இருக்கிறார்.

திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அணைப் பாளையம் பகுதியில் தரைப் பாலம் ஒன்று அமைந்திருக்கிறது. நேற்று இரவு முதல் கோவை மற்றும் திருப்பூர் சுற்றுவட்டாரங்களில் பெய்த கனமழையால் நொய்யலாற்றில் தண்ணீர் அதிகமாக பெருக்கெடுத்து ஓடியது. நொய்யலாறு வழிந்தோடும் காலேஜ் ரோடு தரைப் பாலமும் நேற்றைய மழையால் தண்ணீரில் முழ்கிப்போனதால், இன்று காலை முதலே அந்தத் தரைப் பாலத்தை வாகன ஓட்டிகள் பயன்படுத்த வேண்டாம் என்று தடுப்புகளை வைத்துவிட்டு சென்றனர் காவல்துறையினர். பின்னர் தரைப் பாலத்தின் மேல் தேங்கியிருந்த தண்ணீர் மதியத்திற்குப் பிறகு முழுவதுமாக வழிந்தோடியதால், பிறகு மீண்டும் அப்பகுதியின் வழியே வாகனப் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இந்நிலையில் மாலை நேரம் சம்பந்தப்பட்ட தரைப் பாலத்தின் வழியே டி.வி.எஸ் மொபட்டில் சென்ற அடையாளம் தெரியாத நபர் ஒருவர், நிலைதடுமாறி தரைப் பாலத்தின் கீழே பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் வண்டியோடு சேர்ந்து விழுந்திருக்கிறார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் தண்ணீருக்குள் இருந்து அந்த டி.வி.எஸ் வண்டியை மட்டும் கைப்பற்றி இருக்கிறார்கள்.
தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், உள்ளே விழுந்த அந்த நபர் என்ன ஆனார் என்று தெரியாமல் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறனர் காவல்துறையினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement