Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு டெல்லியிலும் போராட்டம்! #RIPAnitha

தில்லி போராட்டம்

பன்னிரெண்டாம் வகுப்பில் 1,176 மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் சேரமுடியாததால் அரியலூர் மாணவி அனிதா உயிரிழந்தது, டெல்லி மாணவர்களிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி அனிதாவின் உயிரைப் பறித்த நீட்டை ரத்துசெய்யக் கோரி, தமிழகம் முழுவதுமிருந்தும் போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. தமிழகம் தாண்டி டெல்லியிலும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு வளாகத்தில் உள்ள சபர்மதி தாபா முன்பு தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் உருவ பொம்மை எரிப்புப் போராட்டத்தில் மாணவர்கள்  ஈடுபட்டனர். 

அனிதா

'நியாயமற்ற முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்' எனப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் முழக்கமிட்டனர். இதைத் தவிர, இன்று மாலையில் ஜந்தர் மந்தர் பகுதியிலும் மற்றொரு போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லியில் தமிழ்க் கவிஞர் மாலதி மைத்ரியின் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில், கொட்டும் மழையில் பியுசிஎல் அமைப்பினர், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், ஜமியா மில்லியா பல்கலைக்கழகம், அமிட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படிக்கும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

விவசாயிகள்

டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வரும் தமிழக விவசாயிகளும் கொட்டும் மழையில் நடந்த இந்தப் போராட்டத்தில் இணைந்து தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர். 'மாணவி அனிதாவைக் கொன்ற மத்திய மாநில அரசுகள் பதவி விலகவேண்டும்;  நீட் தேர்வைத் திரும்பப்பெற வேண்டும்; மாநிலத்தின் கொள்கையில் மத்திய அரசு தலையிடக் கூடாது' என்று வலியுறுத்தி, போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர். 

- அழகு சுப்பையா 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement