Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வறுமையில் வாடிய தம்பதிக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்..!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த பபிதா என்பவர், குழந்தையுடன் மயங்கி விழுந்தார். ரெட்கிராஸ்  மூலம்  மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தபின்பு, அந்தப் பெண்ணிடம் விசாரித்தார் மாவட்ட ஆட்சியர். 'காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் வறுமை வாட்டியதால் கைக்குழந்தையுடன் தன்னை,  கைவிட்டுச் சென்றுவிட்டார். என்னை அவருடன் சேர்த்து வைக்க வேண்டும். எங்களுக்கு வாழ வழிகாட்ட வேண்டும். இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை' என்று கோரிக்கை வைத்தார். 

வீரராகவராவ்

அதனால் மாவட்ட ஆட்சியர் இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உத்தரவைத் தொடர்ந்து புயல் வேகத்தில் செயல்பட்ட அதிகாரிகள், பபிதாவின் கணவர் சுரேஷ் கன்னியாகுமரியில் இருப்பதை அறிந்து அங்குச் சென்று அவருக்கு அறிவுரை கூறி மதுரைக்கு இன்று அழைத்து வந்தனர். இருவரும் எக்காரணம் கொண்டும் பிரியக் கூடாது என்று ஆலோசனை வழங்கி சேர்த்து வைத்த ஆட்சியர் வீரராகவராவ், சுரேஷுக்கு தொழில் செய்ய மானியத்துடன் வங்கிக்கடனும், அப்பெண்ணுக்கு அரசுத் துறையில் சமையல் உதவியாளார் பணியும் ஏற்பாடு செய்து தருவாதாகவும் உறுதியளித்தார். துயரத்தின்  எல்லைக்குச் சென்ற அந்தத் தம்பதி மகிழ்ச்சியுடன் சென்றார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement