வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (03/09/2017)

கடைசி தொடர்பு:07:21 (03/09/2017)

குஜராத்தை குறிவைக்கும் ஆம் ஆத்மி... சட்டசபைத் தேர்தலில் களம் இறங்குகிறது!

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் வெற்றி பெறுவதில் பி.ஜே.பி கவுரவப் பிரச்னையாக கருதுகிறது. அதே நேரத்தில் பி.ஜே.பி-யை ஒரு கை பார்ப்பது என அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்திருக்கிறார்.

கெஜ்ரிவால்

1998-ம் ஆண்டில் இருந்து  குஜராத் மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையுடன் பி.ஜே.பி ஆட்சி செய்து  வருகிறது. அதற்கு முன்பு பல ஆண்டுகளாக ஆட்சியில் காங்கிரஸ் இருந்து வந்தது. எனவே, இதுவரை அந்த மாநிலத்தில் பி.ஜே.பி-காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி இருந்து வந்தது.

டெல்லியில் பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி ஆட்சி நடத்துகிறது, பஞ்சாப் மாநிலத்தில் பிரதான எதிர்கட்சியாக ஆம் ஆத்மி இருக்கிறது. இந்த இரண்டு மாநிலங்களைத் தொடர்ந்து இப்போது ஆம் ஆத்மி கட்சி குஜராத் மாநிலத்தில் தமது கவனத்தைத் திருப்பி இருக்கிறது.  டெல்லியில் கடந்த 2-ம் தேதி நடந்த மத்திய மற்றும் குஜராத் மாநில ஆம் ஆத்மி நிர்வாகிகள் கூட்டத்தில் குஜராத் மாநிலத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை நிறுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.


எந்த ஒரு குற்றவழக்கிலும் தொடர்பு இல்லாத,முறைகேட்டில் ஈடுபடாதவர்களுக்கு மட்டும் குஜராத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்றும் ஆம் ஆத்மி கூறி உள்ளது. முதல் கட்டமாக வரும் 17-ம் தேதி குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாகவும் அந்தக் கட்சி அறிவித்துள்ளது. எனவே, இந்த முறை குஜராத்தில் மும்முனைப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க