Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனிதாவுக்கு நீதி கேட்டு வெடித்தது போராட்டம் - பா.ஜ.க அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

நீட் தேர்வால் மருத்துவக் கனவு தகர்க்கப்பட்ட மாணவி அனிதா நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது இறப்புக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்றும் காலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அனிதாவுக்கு நீதி கேட்டு போராட்டம்


* நுங்கம்பாக்கம், லயோலா சுரங்கப்பாதையில் 30-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்தது.

* அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

*  நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தி.நகரில் உள்ள பி.ஜே.பி அலுவலகம் அருகே மே-17 இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீஸார், அவர்களை அருகில் உள்ள மண்டபத்தில் தங்கவைத்துள்ளது.

* சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், பத்திரிகையாளர்கள் சார்பில் அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

பா.ஜ.க அலுவலகத்துக்கு பாதுகாப்பு

இதனிடையே, தொடர்ந்து வெடித்து வரும் போராட்டங்களால், தி.நகரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்துக்கு தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement