Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருச்சி கட்டட விபத்து: இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட ஒரு வயது குழந்தை

திருச்சியில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கட்டட விபத்துக்குக் காரணமான கட்டட உரிமையாளரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி கட்டட விபத்து

திருச்சி, மலைக்கோட்டை அருகே சறுக்குப்பாறை பகுதியில் உள்ள தஞ்சை குளத்தெருவில் வசிக்கும் கண்ணையா என்பவருக்குச் சொந்தமான 3 மாடி கட்டட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதில் 6 குடும்பங்கள் வாடகைக்கு வசித்து வருகின்றனர். அந்தப் பழமையான  மாடிக் கட்டடம்  இன்று அதிகாலை 4 மணியளவில் இடிந்து விழுந்தது.  அதிகாலையில் நடந்த இந்த விபத்தில் வீட்டில் தூங்கிய பலர் சிக்கி இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. 

அடுத்து மூன்று வாகனங்களில் வந்த 20 மீட்புப்படையினரும் அப்பகுதிக்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த சுமார் பத்து பேர் சிக்கியுள்ளதால்,  அவர்களை உயிருடன் மீட்கும் பணியில் போலீசார் மற்றும் மீட்புப்படையினருடன், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.  

தொடர்ந்து இடிபாடுகளை தகர்த்துச் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக நவீன கருவிகள் வரவழைக்கப்பட்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலமணி நேரமாக மீட்புப் பணி தொடரும் நிலையில், முதல்கட்டமாக கார்த்திக் என்பவரும், அவரது 5 வயது மகன் ஹரீஷ் ஆகியோர் பலியாகி இருப்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர். மேலும்  கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய ராஜேஸ்வரி உள்ளிட்ட 2பேர் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் பழனி என்பவர் இறந்துள்ளார்.  

திருச்சி கட்டடம்மேலும், இடிபாடுகளில் சிக்கி 6 பேர்  உள்ளதாகக் கூறப்படும் நிலையில் மீட்புப்பணி தொடர்கிறது. சில நாள்களுக்கு முன்னர் அருகில் உள்ள கட்டடம் இடிக்கப்பட்டதால், இடிந்தக் கட்டடம் வலுவிழந்ததாக்கவும், கடந்த சில நாள்களாக திருச்சியில் பொழியும் கனமழைக்கு தாங்காமல் வீடு இடிந்து விட்டதாக  காரணங்கள் கூறப்படுகின்றன. இந்நிலையில், கட்டட உரிமையாளர் கண்ணப்பன் என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கட்டடத்தை முறையாகப் பராமரிக்கவில்லை என்பதால் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒன்றரை வயது குழந்தையை மீட்புக் குழுவால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையில் பெயர் அங்காள பரமேஸ்வரி. குழந்தை மீட்கப்பட்டவுடன் அங்கு திரண்டிருந்த அனைவரும் கைத் தட்டி கோஷங்கள் எழுப்பினர். இடிந்த கட்டடத்தை பார்வையிட வந்திருந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குழந்தையை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

தொடர்ந்து மீட்புப்பணி நடப்பதால் திருச்சியில் பதற்றம் நிலவுகிறது. 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement