Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அனிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்' - கிருஷ்ணசாமி கருத்து

மாணவி அனிதாவின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

கிருஷ்ணசாமி


அரியலூர், அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதையும் போராட்டக்களத்துக்கு கொண்டு வந்துள்ளது. அனிதா மரணம் அடைந்த உடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறிய கருத்துகள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. குறிப்பாக, "அனிதாவின் மரணத்துக்கு நீட் தேர்வு காரணமில்லை. அவரது மரணம் குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்து விட்டதா? காவல்துறை விசாரணை முடிந்துவிட்டதா? எம்.பி.பி.எஸ் படிப்புக்கு இடம் கிடைக்காவிடின், அவர் வேறு படிப்பைப் படித்திருக்கலாம்" என்று அவர் கூறிய கருத்துகள் அனைத்துமே சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில் கிருஷ்ணசாமி சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "நீட் தேர்வு விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் அனுதாபத்தை ஏற்படுத்தும் வகையில் அனிதாவை சிலர் பயன்படுத்தினர். அனிதாவின் மரணம் இயற்கையானது அல்ல. பல்வேறு தரப்பில் இருந்து வந்த அழுத்தங்களால்தான் அனிதா உயிரிழந்துள்ளார். எனவே, இதில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால், அனிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் உண்மை நிலவரம் வெளியில் வரும்.

சி.பி.ஐ விசாரணை குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதுவேன். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக செயல்படும் தேசவிரோத கும்பல்களே அனிதாவின் இறப்புக்குக் காரணம். நீட் எதிர்ப்பாளர்களிடம் இருந்து தொடர்ந்து வந்த அழுத்தங்களின் காரணமாகவே அனிதா உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டால், பல்வேறு ஆதாரங்களை நான் சமர்ப்பிக்க தயாராக இருக்கிறேன். நீட் தேர்வைப் பற்றி தெரிந்தவர்கள் யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். நீட் தேர்வுக்கு மருத்துவர்கள் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மருத்துவக் கல்வி தரத்தின் உயருவதற்காகவே நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது" என்று கூறியுள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement