முதல்வர் பங்கேற்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மேடையில் 'திடீர்' தீ விபத்து

திருவள்ளூர், பஞ்செட்டியில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மேடையில் தீ விபத்து ஏற்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி


அ.தி.மு.க நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா அ.தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, மதுரை, கடலூர், திருவாரூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.


இதனிடையே, கடந்த வாரம் வண்டலூர் அருகே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடந்தது. இரு அணிகள் இணைந்தப் பிறகு நடந்த முதல் கூட்டமான அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டிப் பகுதியில் இன்று மாலை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.


இந்நிலையில், இன்று காலை அந்த விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி திரை திடீரென்று வெடித்ததால், தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சற்று நேரத்தில் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தால், அந்தப் பகுதி சிறிது நேரத்துக்கு பரபரப்பாக காணப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!