Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பரபரப்பான சூழலில் நடைபெற உள்ள அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்!

மிழகத்தில் தற்போது அரசியல் ரீதியாக பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் இந்த வேளையில் நாளை மறுநாள்(செப். 5) சென்னையில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 

admk head office

பிரிந்த அ.தி.மு.க அணிகள் இணைந்துள்ள நிலையில், தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களுக்குத் தற்போதைய முதல்வர் மீது நம்பிக்கை இழந்துள்ளதாக ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்தனர். எதிர்க்கட்சிகள், டெல்லி வரைச் சென்று தமிழகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையில் வருகின்ற 12 -ம் தேதி அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டம் குறித்து விவாதிப்பதற்காக நாளை மறுநாள் சென்னையில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில் இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement