Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புலிகள் காப்பக பகுதியில் உள்ள களக்காடு தலையணையில் குளிக்க அனுமதி!

மேற்குத் தொடர்ச்சி மலையில் களக்காடு புலிகள் காப்பகப் பகுதியில் அமைந்துள்ள தலையணையில் நீர் வரத்து அதிகரித்து இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதித்து உள்ளது.

 

களக்காடு தலையணை

 

நெல்லை மாவட்டத்தில் கடந்த இரு வருடங்களாக பருவ மழை சரிவரப் பெய்யாததால் ஆறுகள் குளங்கள் வறண்டன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள புலிகள் காப்பகப் பகுதிகளும் வறட்சியின் பிடியில் இருந்து தப்பவில்லை. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை இல்லாததால் களக்காடு புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தலையணையில் நீர் வரத்து குறைந்தது. மலைப் பகுதி வழியாக வரக்கூடிய பச்சையாறு வறண்டதால் தலையணை கடந்த மே1-ம் தேதி மூடப்பட்டது.

பின்னர், ஜூன் மாதத்தில் பெய்த மழையின் காரணமாக 28-ம் தேதி திறக்கப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்யாததால் தலையணை வறண்டது. இதனால், திறக்கப்பட்ட 17 நாளிலேயே மீண்டும் மூடப்பட்டது. தொடர்ந்து இந்தப் பகுதியில் மழி பொய்த்ததால், ஜூலை 15-ம் தேதி மூடப்பட்ட தலையணை திறக்கபடாமலேயே இருந்தது. இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக களக்காடு வனப் பகுதியில் கடுமையான மழைப் பொழிவு இருந்தது. இதனால் பச்சாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

தலையணை

ஆற்றில் ஓடிவந்த புது வெள்ளம் காரணமாக களக்காடு தலையணையில் தடுப்பையும் தாண்டி ஆர்ப்பரித்தபடி தண்ணீர் விழுந்தது. இதனால் தலையணையைத் திறந்து சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். தடுப்பணைக்குச் செல்ல பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதால அங்கு சென்று உற்சாகமாகக் குளித்து மகிழ்கின்றனர். வனப் பகுதிக்குள் பிளாஸ்டிக், மது உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். வேட்டைத் தடுப்புக் காவலர்கள் திவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement