Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி அறிமுகம்: நெல்லையில் விற்பனை இலக்கு ரூ.20 கோடி!

நெல்லை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தீபாவளி விற்பனை இலக்காக ரூ 20 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு இருகிறது.

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை

தமிழக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலமாக வேட்டி, சேலை உள்ளிட்ட துணி வகைகளுக்கு சிறப்புத் தள்ளுபடி விற்பனையை அறிமுகம் செய்துள்ளது. அத்துடன், தீபாவளிப் பண்டியையை முன்னிட்டு கதர் மற்றும் பட்டுச் சேலைகளில், பெண்களைக் கவரும் விதத்தில் புதிய டிசைன்களையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இவை கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை கவரும் விதத்தில் உள்ளன. 

தீபாவளி தள்ளுபடி சிறப்பு விற்பனையை நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியின் வேதியியல் துறைத் தலைவரான ரமா பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ’’தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களில் 30 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் 17 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் உள்ளன. அவை அனைத்திலும் இந்த தள்ளுபடி வழங்கப்படுவதுடன், புதிய ரகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன.

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்திமதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் மட்டும் கடந்த திபாவளிக்கு 5 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள விற்பனை நிலையங்களில் கடந்த ஆண்டு முழுவதும் 30 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. இதில், தீபாவளி விற்பனை மட்டும் 16 கோடி ரூபாய். இந்த ஆண்டு இந்த விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

புதிய ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளதால், இந்த வருடம் நெல்லை மாவட்டட்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களின் மூலமாக தீபாவளி விற்பனை மட்டும் 20 கோடி ரூபாயை எட்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் இந்த சிறப்பு தள்ளுபடியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ எனத் தெரிவித்தார். கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் இசக்கிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement