Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தினகரனுக்கு சவால் விடும் ஆர்.பி.உதயகுமார்!

''தினகரனுக்கு தைரியமிருந்தால் திருமங்கலம் தொகுதிக்குள் வரட்டும்'' என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தினகரன் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

தினகரனின் தீவிர விசுவாசியாக இருந்த ஆர்.பி. உதயகுமார், தற்போது  அவருக்கு எதிராக தீவிரமாகப் பேசிவருகிறார். உதயகுமார்  வகித்த ஜெயலலிதா பேரவை  செயலளார் பதவியை தினகரன் பறித்தார். பதிலுக்கு, சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைப்பதாக 2011-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய ’சிடி’-யை  வெளியிட்டார் உதயகுமார். இதையடுத்து, சசிகலா முதல்வராக வரவேண்டுமென்று உதயகுமார் பேசியதை ஜெயா டிவி-யில் தொடர்ச்சியாக ஒளிபரப்பினார்கள்.

ஆர்.பி.உதயகுமார்

இந்நிலையில்தான் நேற்று திருமங்கலத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய உதயகுமார், ''தினகரனுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. குழப்பத்தை ஏற்படுத்தி வரும் தினகரன், தைரியமிருந்தால், என்னுடைய திருமங்கலம் தொகுதிக்குள் நுழைந்து பார்க்கட்டும். நுழைந்தால் அவர் நிலைமை என்னாகும் என்பது தெரியும். அவரால் வரமுடியாவிட்டால்  சொல்லும் இடத்துக்கு நாங்கள் வருகிறோம்'' என்று  பேசினார். இது  தினகரன் கவனத்துக்கு சென்றுள்ளது. இந்நிலையில் உதயகுமாருக்கு எதிராக தினகரன் ஆதரவாளர்கள் சமூகஊடகங்களில் கடுமையாக பதிவு செய்துவருகிறார்கள். 'சமீபத்தில் திருமங்கலம் தொகுதியான செக்காணுரனிக்கு தினகரன் வந்தபோது எங்கே இருந்தீர்கள்' என்றும், மீம்ஸ் மூலமும் தினகரன் ஆதரவாளர்கள் உதயகுமாருக்கு சவால் விடுத்து வருகிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement