Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓணம் பண்டிகைக்கு பூக்கள் விற்பனை அமோகம்!

பூக்கள்

கேரளாவில் நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்து இருப்பதால், பூக்களைப் பயிரிட்டு விற்பனைக்கு கொண்டுவந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கேரளாவில் நாளை (4-ம் தேதி) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அங்கு விழா களைகட்டத் தொடங்கி இருக்கிறது. ஓணம் பண்டிகையின் முக்கிய அம்சமாக அத்தப்பூ கோலம் போடப்படுவது வழக்கம். இதற்காக தமிழகத்தில் இருந்து அதிக அளவில் பூக்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கேரளாவில் இருந்து வரக்கூடிய வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு வரும் பூக்களை மூட்டை மூட்டையாக வாங்கிச் செல்கின்றனர். 

தமிழகத்தில் இன்றும் நாளையும் முகூர்த்த தினம் என்பதால் பூக்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. ஓணம் மற்றும் முகூர்த்தம் காரணமாக நெல்லை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கனகாம்பரம் பூவின் விலை கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று கிலோவுக்கு 1,500 ருபாயாக உயர்ந்தது. பிச்சிப்பூ, மற்றும் மல்லிகை பூவின் விலையும் கணிசமாக அதிகரித்து கிலோவுக்கு 1,200 ரூபாய் என்ற நிலையை அடைந்தது.

பூ மார்க்கெட்

ரோஜா கிலோ  300 ரூபாயாகவும், சம்பங்கி கிலோவுக்கு 350 ரூபாயாகவும் விற்பனையானது. வாடாமல்லி பூவின் விலை வழக்கமாக 30 ரூபாயைத் தாண்டாது. ஆனால், அத்தப்பூ கோலத்தில் இந்தப் பூவையும் பயன்படுத்துவதால் அதற்கும் வரவேற்பு ஏற்பட்டு இருக்கிறது. அதனால் வாடாமல்லி கிலோவுக்கு 150 ரூபாயாக உயர்ந்துள்ளது. ’கேரளாவில் அடுத்த சில தினங்களுக்கு ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் நடைபெறும் என்பதால் அடுத்த 3 தினங்களுக்கு இந்த விலையே நீடிக்கும்’ என பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு போதுமான மழை இல்லாத நிலையில், விவசாயிகள் கடுமையான சூழலையும் பொருட்படுத்தாமல் பூ உற்பத்தி செய்து வருகின்றனர். பல இடங்களில் நிலத்தடி நீரும் இல்லாததால், டிராக்டர் மூலமாக தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வந்து பூச்செடிகளை வளர்த்தனர். இந்த நிலையில், தற்போது பூவுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.   
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement