Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நதிகளை மீட்க காரில் 7,000 கி.மீ பயணத்தை தொடங்கிய ஜக்கி வாசுதேவ்!

"நதிகளை மீட்போம்" என்ற இயக்கத்தின் தேசிய அளவிலான விழிப்புஉணர்வு பேரணி இன்று கோவையில் தொடங்கியது. இந்த விழாவில் தேசிய அளவில் பல்வேறு துறைகள் சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

Rally for rivers

வேகமாக வற்றி வரும் நதிகளை மீட்கவும், அவற்றின் அடிப்படை நீரோட்டத்தை அதிகரிக்கவும் "நதிகளை மீட்போம்" என்ற இயக்கம், ஈஷா யோகா மையத்தின்  நிறுவனர் ஜக்கி வாசுதேவ் -ஆல் முன்னெடுக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

 இன்று கோவையில் இருந்து நாடு முழுவதும் விழிப்புஉணர்வு செய்யும் பயணம் தொடங்கப்பட்டது. இதற்கான விழா கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது. ஜக்கி வாசுதேவ் தலைமையில் நடந்த இந்த விழாவில்  பஞ்சாப் ஆளுநர் வி.பி சிங், கிரிக்கெட் பிரபலங்கள் விரேந்திர சேவாக், மித்தாலி ராஜ், அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கார் பந்திய வீரர் நரேன் கார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

rally for rivers

நிகழ்ச்சியில், நாட்டில் உள்ள நதிகளை பாதுகாக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக அரசிற்கு சில கோரிக்கைகள் தயார் செய்யப்பட்டு அது அரசிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் இந்த பயணம் 16 மாநிலங்கள் வழியாக வருகின்ற அக்டோபர் மாதம் 2 -ம் தேதி புது டெல்லியில் நிறைவு பெறும்.

இந்த பயணத்தின் போது 20 -க்கும் மேற்பட்ட இடங்களில் பிரசார கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் 16 மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அப்போது அவர்களிடம் தயார் செய்யப்பட்ட பரிந்துரைகள் அளிக்கப்படும். இந்த பேரணியில் ஜக்கி வாசுதேவ், சுமார் 7,000 கிலோமீட்டர் காரை ஒட்டி சென்று இந்த விழிப்புஉணர்வு பயணத்தில் கலந்து  கொள்கிறார். இதற்காக தயாராக இருந்த  நதிகளை மீட்போம் போன்ற பிரசார வாசகங்கள் அடங்கிய பென்ஸ் நிறுவனத்தின் ஜீப் ஒன்றில் தனது பயணத்தை தொடங்கினார். 
இந்த நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement