Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக நடைபெற்ற முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக முதுகு தண்டுவட அறுவை சிகிச்சையை நிகழ்த்தியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

திருப்பூர்  வேலம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் விவசாயி சுந்தரம். 50 வயதான சுந்தரம், கடந்த சில வருடங்களாகவே முதுகுத் தண்டுவட வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வலி அதிகம் ஏற்படவே, சுந்தரத்தை உடனடியாக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அவரது குடும்பத்தினர்.

அங்கு சுந்தரத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து முதன்முறையாக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவர்கள் சுந்திரமூர்த்தி மற்றும் கிருபானந்தம் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழு, சுந்தரத்துக்கு முதுகுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். சிகிச்சை முழுவதுமாக முடிந்த நிலையில் சுந்தரம் தற்போது மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் கண்ட பிறகு சுந்தரத்தை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

திருப்பூர் அரசு தலைமை மருத்துமனையிலேயே முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதால், இனி முதுகு தண்டுவட பிரச்னைக்காக நோயாளிகள் கோவையில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியதில்லை என்று தெரிவித்திருக்கிறது திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை.

இதற்கு முன்பு வரை முதுகு தண்டுவட சிகிச்சைக்கு கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையே நம்பியிருந்தார்கள் திருப்பூர் மக்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement