Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நீட் விலக்கு பெற அனைத்து உதவிகளையும் செய்தேன்...'- நிர்மலா சீதாராமன் விளக்கம்

அரியலூர், அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதையும் போராட்டக்களத்துக்கு கொண்டு வந்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக இந்திய அளவில் தற்போது எதிர்ப்பு குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மாநில அரசுக்கு என்னால் ஆன அனைத்து ஒத்துழைப்புகளும் கொடுத்தேன்' என்று தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன்

'தமிழகத்தில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வுக்கு ஓர் ஆண்டு விலக்கு அளிக்கப்படும்' என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நீட் தேர்வு குறித்து குழப்பம் உச்சத்தில் இருக்கும்போது கூறினார். இருப்பினும் நீட் தேர்வுக்கு விலக்க அளிக்கப்படவில்லை. இதையடுத்து தமிழக எதிர்க்கட்சிகள், 'மத்திய அரசின் பொய் வாக்குறுதியால்தான் அனிதா இறந்தார்' என்று குற்றம் சாட்டின.

இந்நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் நோக்கில் பேசிய நிர்மலா சீதாராமன், `அனிதா இறந்தது நம் எல்லோருக்கும் ஒரு மிகப் பெரிய நஷ்டம். ஏழை குடும்பத்தில் இருந்து வந்து அவ்வளவு திறமையோடு படித்தும் தற்கொலை செய்துகொண்டார் என்றால் அதைவிட ஒரு பெரிய இழப்பு இருக்கவே முடியாது. நீட் விலக்கு கோரும் மாநில அரசின் அவசரச் சட்டத்துக்கு என்னால் முடிந்த அத்தனை உதவியையும்  செய்தேன். நீட் என்பது ஒரே நாளில் அமல்படுத்தப்படவில்லை. ஆனால், இந்த மாணவி இறந்தது குறித்து நாம் எல்லோரும் ஒன்றாகக் கூடி பேசலாம். ஆனால், வீணாகப் பழி போடும் அரசியலை இங்கே செய்ய வேண்டாம். நீட் தேர்வு விலக்குக்கான ஒவ்வொரு கட்டத்திலும் மாநில அரசுக்கு முழு ஆதரவு கொடுத்தோம்' என்று பேசியுள்ளார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement