Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாணவி அனிதாவுக்காக திருச்சியில் தொடங்கியது மாணவர்களின் காலவரையற்ற போராட்டம்!

நீட் தேர்வு காரணமாக மருத்துவக் கனவு கலைந்துபோனதால் தற்கொலை செய்துகொண்டார் அரியலூரைச் சேர்ந்த அனிதா. மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் நீட் தேர்வை ரத்து செய்திடக் கோரியும் தமிழகம் முழுவதும் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

protest in trichy

திருச்சியில் இரண்டு நாட்களாக கி.ஆ.பெ கல்லூரி எதிரில் அனைத்திந்திய மாணவர் மன்றம் சார்பில் உயிர் நீத்த தோழி அனித்தாவுக்காக உரிமை கேட்டு தொடர்  உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்
இந்நிலையில், இன்று புதிதாக சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தூய வளனார் கல்லூரி மாணவர்கள் அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டும் நீட் தேர்வுக்கு எதிராகவும் காலவரையற்ற போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஆரம்பத்தில் பத்து பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் தற்போது 200 மாணவர்கள் உள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கூறுகையில், "அனைவரும் தோழி அனித்தாவுக்காகவும் நீட் தேர்வுக்கு எதிராகவும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நாங்கள் இதனோடு விவசாய பிரச்னைகளையும் விவசாயிகள் நிலை குறித்தும் பேசப்போகிறோம். என்ன நடந்தாலும் போராட்டத்தைக் கைவிட மாட்டோம். திருச்சியில் உள்ள மற்ற கல்லூரி மாணவர்கள் எங்களோடு இணைய வந்து கொண்டு இருக்கிறார்கள். பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறினர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement