Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மரத்தில் தொங்கிய இளம்பெண் - தீவிர விசாரணையில் காவல்துறை..!

girl hanged

திருப்பூர் மாவட்டம் நெரிப்பெரிச்சல் பகுதியில் இளம்பெண் ஒருவர் மரத்தில் தொங்கியவாறு உயிரற்றுக்கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் என்ற ஊரில் அமைந்திருக்கும் பொது கழிவறைக்குப் பின்புறப் பகுதியில் உள்ள மரத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரற்றுக் கிடந்திருக்கிறார். பொது கழிவறைக்குச் சென்ற நபர்கள் சிலர் அதைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியில் சத்தம்போட, அக்கம்பக்கத்தில் உள்ள அனைவரும் அந்த இடத்தில் கூடியிருக்கிறார்கள். பின்னர் அனுப்பர்பாளையம் பகுதி காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இளம்பெண் தூக்கில் தொங்கியிருந்த மரத்தின் கிளை, மிக உயரமான இடத்தில் இருந்ததால் யாரோ வேறு சிலர் இணைந்து அப்பெண்ணை கொலை செய்து, மரத்தில் தொங்கவிட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும், கொலையைத் தற்கொலைபோல திசை திருப்பும் முயற்சியாகவும் இந்தச் சம்பவம் பார்க்கப்படுவதால் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement